Therthal Tholvi
தேர்தல் தோல்வி.
நண்பர்களே இது ஒரு கற்பனை கதை, இப்போது நடக்கும் தேர்தல் நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் அந்த பெரிய கட்சி தோற்று போனால்?
தேதி 04ஆம் நாள் ஜூன் மாதம், நேரம், மதியம் 3 மணி.
என் அலுவலக மேனேஜர் வந்தார், “கைஸ் காலைல இருந்து வேலை பார்த்துகிட்டே எலெக்ஷன் ரிசல்ட் பாக்குறீங்க தெரியும், இப்போ இருக்குற கட்சி தோக்குற மாறி இருக்கு, அதனால ஊர் முழுக்க கலவரம் வரும்னு சொல்றாங்க, அதனால எல்லாரும் உடனே உங்க ரூம்க்கு (எங்க ஆபீஸ்ல வேலை செய்யிற எல்லாரும் ரூமில் தங்கி வேலை செய்யிறோம், ஹாஸ்டலில் சிலர், தனி ரூமில் சிலர், நான் மாடியில் ரூம் எடுத்துத் தங்கியிருக்கேன்) போய் அங்கே இருந்து வேலை செய்யுங்கள்!!!” என்று சொன்னார்.
சாதாரணமாக வீட்டில் தங்கி வேலை செய்ய அனுமதி தராத எங்கள் முதலாளி இன்று கொடுத்தது எங்களுக்கு ஆச்சரியமாக...